காலி முகத்திடலை நோக்கி படையெடுக்கும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்!
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்ட பேரணி இன்று காலி முகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்தை சென்றடையவுள்ளது.
இதன்படி இன்று காலை முதல் காலி முகத்திடலுக்கான பல வீதிகளில் வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆர்ப்பாட்ட பேரணி தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றில் இருந்து பெறப்பட்ட உத்தரவை, பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகேவிடம் கோட்டை பொலிஸார் கையளித்துள்ளனர்.
இன்று முதல் நாளை காலை 9 மணி வரை கோட்டை ஜனாதிபதி மாவத்தை, யோர்க் வீதி மற்றும் வங்கி மாவத்தை உள்ளிட்ட பல நியமிக்கப்பட்ட வீதிகளுக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று காலை கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்ட பேரணி காலி முகத்திடலை சென்றடையவுள்ளது.