எந்த பொருட்களை எல்லாம் பிரிட்ஜில் வைக்கவே கூடாது? இதை படித்து தெரிஞ்சிகோங்க
வீட்டுக்கு தேவையான எந்த பொருட்களை வாங்கினாலும், அதை குளிர்சாதப்பெட்டியில் (பிரிட்ஜில்) வைப்பதே இன்றைய தலைமுறையினர் பலருக்கு பழக்கமாகி வருகின்றது. ஆனால் அது உடலுக்கு பல பாதிப்பை ஏற்படுத்துவதோடு பொருட்களையும் விரைவில் வீணாக்கும்.
காய்கறிகள், பழங்கள், மாவு, சாக்லெட், ஐஸ்கிரீம், மருந்து உட்பட பல பொருட்கள் இதில் அடக்கம்.
ஒருசில பொருட்களை பிரிட்ஜில் வைக்கும் போது அதன் தன்மை கெடாமல் பிரெஷ் ஆக இருக்கும். அதுவே ஒரு சில பொருட்களை வைக்கும் போது அதன் இயல்புத்தன்மை கெட்டு வீணாகிவிடும்.
எனவே பிரிட்ஜில் வைக்கக்கூடாத சில பொருட்களின் பற்றி இங்கே பார்போம்.
வெங்காயம்
காற்றோட்டமான இடங்களில் வெங்காயத்தை வைக்கும் போது, அழுகாமல் இருக்கும். பல நாட்களுக்கு பயன்படுத்தலாம். ஆனால் பிரிட்ஜில் வைக்கும் போது ஈரத்தன்மையால் விரைவில் அழுகிவிடும்.
தர்பூசணி
தர்பூசணி, கிர்னி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களை பிரிட்ஜில் வைக்கக்கூடாது. சாதாரண அறையின் வெப்பநிலையையே இவை தாங்கக்கூடும். இயற்கையான வெப்பநிலையில் இருக்கும்போது தான் இவற்றின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ரொட்டி
காலை டிபன் செய்யும் நேரத்தை மிச்சமாக பலரும் ரொட்டியை அடிக்கடி பயன்படுத்துகின்றனர். ஆனால் ரொட்டியை பிரிட்ஜில் வைக்கும் போது ஈரப்பதம் குறைந்து வறண்டு விடும். அப்போது இயல்புத்தன்மை மாறி சுவையும் குறையக்கூடும்.
தேன்
தேனை பிரிட்ஜில் வைக்கும் போது அதன், சுவை, மருத்துவ குணங்கள் குறையக்கூடும். எனவே காற்றோட்டமான மற்றும் வெளிச்சம் குறைவான இடத்தில் ஒரு கண்ணாடி பாட்டிலில் வைத்திருந்தாலே நன்றாக இருக்கும்.
துளசி
துளசி போன்ற மூலிகைகளை பிரிட்ஜில் கட்டாயமாக வைக்கக்கூடாது. அப்போது அதன் மருத்துவக்குணம் மாறி உரிய பயன் கிடைக்காது. தேவைப்படும்போது துணியில் சுற்றி ஒரு டப்பாவில் வைக்கலாம்.
உலர் பழங்கள்
பாதாம், பிஸ்தா, முந்திரி, திராட்சை போன்ற உலர் பழங்களை காற்றுப் புகாத டப்பாக்களில் போட்டு வெளியே வைத்தாலே போதுமானது.
உருளைக்கிழங்கு
பிரிட்ஜில் உருளைக்கிழங்கை வைக்கும் போது அதன் சுவை குறையக்கூடிய வாய்ப்புள்ளது. காற்றோட்டமான இடத்தில் வைத்தாலே போதுமானது. பிளாஸ்டிக் பையில் வைக்கும் போது அழுகிவிட வாய்ப்புள்ளது.
ஜாம்
ஜாம் போன்ற உணவுகள் தயாரிக்கும் போதே பதப்படுத்தப்படுவதால், அவை விரைவில் கெட்டு போகாது. எனவே ஜாமை பிரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை.