2026ஆம் ஆண்டு பூமிக்கு வரும் ஏலியன்கள்? பாபா வாங்காவின் பகீர் கணிப்பு
பல்கேரிய பாபா வாங்காவின் பல கணிப்புகள் நடைபெறுவதாக உலக மக்களில் பெரும்பாலானோர் நம்பிவரும் நிலையில் , 2026ஆம் ஆண்டு சில விடயங்கள் நடக்கும் என்ற இவரின் கணிப்புகள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்கா, தனது 12 வயதில் பார்வையை இழந்தார். அவருக்கு பார்வை பறிபோன பின்னர், எதிர்காலத்தை கணிக்கும் சக்தி கிடைத்ததாக கூறப்படுகிறது.
2026 நவம்பரில் வேற்று கிரக வாழ்க்கை
பாபா வங்கா இறப்பதற்கு முன்பு, ஆண்டுதோறும் உலகில் நடக்கும் நிகழ்வுகளை முன்னரே கணித்துள்ளார். பின்னர் அவற்றை குறிப்புகளில் எழுதினார். இதுவரை அவருடைய பல கணிப்புகள் நிறைவேறியுள்ளன.
அந்த வகையில் 2026ஆம் ஆண்டு சில நிகழ்வுகள் நடைபெறும் என பாபா வங்கா ஏற்கனவே கணித்து வைத்துள்ளார்.
இந்த கணிப்புகளில் ஒன்று இயற்கை அனர்த்தம் ஆகும். எரிமலை வெடிப்புகள், நிலஅதிர்வுகள் என்பன இதில் அடங்கும். இந்த பேரழிவுகள் உலகளவில் உயிர்கள், உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம்.
மேலும் மூன்றாம் உலக போரின் சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும், 2026ஆம் ஆண்டு செயற்கை நுண்ணறிவுக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 2026 நவம்பரில் வேற்று கிரக வாழ்க்கையுடனான முதல் தொடர்பு பூமிக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் பாபா வாங்கா குறிப்பிட்டுள்ள வேற்றுகிரகவாசி ஏலியன்களாக இருக்ககூடும் என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.