வானில் இன்று நிகழும் அதிசயம்; சந்திரனை விட 7 சதவீதம் பெரிய சூப்பர் மூன்
பௌர்ணமி தினமான இன்று (06) வானில் சூப்பர் மூன் (Supermoon) தென்படும். இது வழமையாக தென்படும் முழு சந்திரனை விட சுமார் 7 சதவீதம் பெரியதாக தென்படும் என ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனம் (ACCIMT) தெரிவித்துள்ளது.
பௌர்ணமி தினங்களில் வழக்கமாக தென்படும் ஏனைய முழு சந்திரன்களுடன் ஒப்பிடும்போது, இன்றிரவு முழு சந்திரன் பெரியதாகவும் பிரகாசமாக தென்பட இருப்பதால் சூப்பர் மூன் என அழைக்கப்படுகிறது.
வானியலாளர்களுக்கு அரிய வாய்ப்பு
சந்திரன் அதன் நீள்வட்ட சுற்றுப்பாதையில் பூமிக்கு அருகில் நகரும்போது, சூப்பர் மூன்கள் வருடத்திற்கு பல முறை நிகழ்கின்றன.
இந்த நிகழ்வு முழு சந்திரன் மற்றும் பௌர்ணமி ஆகிய இரண்டு கட்டங்களிலும் நிகழலாம் என ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனத்தின் நிபுணர்கள் குறிப்பிட்டனர்.
கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் வழக்கத்தை விட சற்று அதிக அலை எழுச்சியை சந்திக்க நேரலாம். அதேவேளை இன்றிரவு பிரகாசமான முழு நிலவுக்கு அருகில் சனி கிரகம் நிலைநிறுத்தப்படுவதைக் காண வானியலாளர்களுக்கு அரிய வாய்ப்பு கிடைக்கக்கூடும்.
பௌர்ணமி தினத்தைக் குறிக்கும் போது வானியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஒரு அற்புதமான இயற்கை நிகழ்வைக் காண சூப்பர் மூன் ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.