பிக்குகளின் உடையில் அல்கொய்தா ரௌடிக்குழுவினர் அட்டகாசம்!
கொட்டதெனியாவ, பாண்டுராகொட பிரதேசத்தில் பிக்குகளின் உடையில் ‘அல்கொய்தா குழு’ என்ற பெயரில் இயங்கிய ரௌடிக்குழுவின் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமறைவாக உள்ள மற்றவரை பொலிசார் தேடி வருகின்றனர்.
இவ்வாறு கைதானவர்களில் இருவர் பௌத்த பிக்குகளை போல உடையணிந்து குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர்.
கொட்டதெனியாவ பிரதேசத்தை சேர்ந்த 2 சிறார்கள் காணாமல் போயிருந்த நிலையில், பின்னர் அவர்கள் நீர்கொழும்பில் மீட்கப்பட்டனர். எனினும் அவர்கள் வீடு திருபவில்லை என கூறப்படுகின்றது.
இவ்வாறு சிறுவர்களின் தந்தை இரண்டு திருமணம் செய்தவர் என்றும், அவருக்கு 9 பிள்ளைகள் என தெரிவிக்கப்படுகிறது. அந்த 9 பேரில், 4 பேரே இவ்வாறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.
அதேவேளை இந்த நான்கு பேரில் இருவர், அண்மையில் வீடு புகுந்து வயோதிபத் தம்பதியொன்றை வெட்டிக் காயப்படுத்தியதாக கூறப்படுகின்றது .
மேலும் குறித்த நால்வரும் தம்மை ‘அல்கொய்தா’ என அடையாளப்படுத்திக் கொண்டு வாள்கள் மற்றும் பொல்லுகளுடன், பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக சிங்கள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.