காரைதீவு எல்லையில் பாரிய விபத்து: சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்
நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நிந்தவூர் வெட்டு வாய்க்கால் காரைதீவு எல்லையில் முச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச்சம்பவம் இன்று (01-01-2022) மாலை அக்கறைப்பற்று, கல்முனை பிரதான வீதியில் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நிந்தவூர் வெட்டு வாய்க்கால் காரைதீவு எல்லையில் இடம்பெற்றுள்ளது.

மேலும் இவ்விபத்து சம்பவத்தில் சிறுமி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, கல்முனை நேக்கி வந்த முச்சக்கரை வண்டி மற்றும் அக்கறைப்பற்றை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.