தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையே விமான சேவை ஆரம்பம்
தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையே குறைந்த கட்டணத்தில் நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏயார் ஏசியா விமான நிறுவனத்தில் AIQ 140 என்ற விமானம் தாய்லாந்தின் Don Mueang சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று (09) இரவு கட்டுநாயக்கவை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணித்தவர்களின் எண்ணிக்கை
இந்த பயணத்துக்கு ஏ320 ஏர்பஸ் விமானம் பயன்படுத்தப்பட்டதுடன் 134 பயணிகள் மற்றும் 7 பணியாளர்கள் பயணித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனையடுத்து இந்த விமானம் 174 பேரை ஏற்றிக்கொண்டு கட்டுநாயக்கவில் இருந்து தாய்லாந்து செல்ல உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் வாரத்துக்கு 4 விமான சேவைகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.