இலங்கையில் சடுதியாக அதிகரித்த எயிட்ஸ் நோயாளர்கள்! இதுவே காரணம்
இலங்கையில், ஆணுறைகளின் சீரற்ற பயன்பாடு உள்ளிட்ட காரணங்களினால் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக தேசிய சுகாதார சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஒரு ஆண்டிற்குள் 620 புதிய நோயாளர்கள் மற்றும் 81 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக தேசிய சுகாதார சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆணுறைகளின் சீரற்ற பயன்பாடே இதற்கு பிரதான காரணம் என்று தேசிய சுகாதார சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு (2022) பதிவான ஒட்டுமொத்த தொற்றுக்களுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு முதல் காலாண்டில் (ஜனவரி-மார்ச் வரை) 13 சதவீத அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
மேலும், எண்ணிக்கையில் எச்ஐவி, எயிட்ஸ் தொற்றுக்கள் 4,556 இலிருந்து 5,176 ஆக அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் காலாண்டில், 165 புதிய நோயாளர்கள் மற்றும் 15 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
இருப்பினும், 2022 ஆம் ஆண்டுக்குள் மொத்தம் 1,520 எயிட்ஸ் தொடர்பான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.