சுமந்திரன், சத்தியலிங்கம், சிவஞானம் ஆகியோருக்கு எதிராக போராட்டம்
தமிழ் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்களை இந்தியப் பிரதமர் சந்திக்கக் கூடாது என வலியுறுத்தி கிளிநொச்சியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி A9பிரதான வீதி ஓரம் கிளிநொச்சி பொதுச்சந்தை முன்பாக மக்களால் நிராகரிக்கப்பட்ட சுமந்திரன், சத்தியலிங்கம், சிவஞானம் ஆகியோரின் பதாதைகளை வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
கிளிநொச்சி பிரதேசசபை முன்னாள் உறுப்பினர் போராட்டம்
தமிழ்தேசியக் கூட்டமைப்பு கிளிநொச்சி பிரதேசசபை முன்னாள் உறுப்பினர் ஜீவராஜா என்பவரே போராட்டத்தை மேற்கொண்டிருந்ததாக தெரியவருகின்றது.
சுமந்திரன், சத்தியலிங்கம்,C.v.k சிவஞானம் போன்றவர்களுக்கு எதிராக தனது எதிர்ப்பினை வெளிக்காட்டி போராட்டத்தை அவர் மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில் மக்களால் நிராகரிக்கப்பட்ட சுமந்திரன், சத்தியலிங்கம், சிவஞானம் ஆகியோர் மீது மக்கள் வைத்துள்ள எண்ணப்பாடு இதுதான் என்றும், இவர்களாக விலகி போவதுதான் தமிழ்த்தேசியதுக்கு நன்மை எனவும் அவதானிகள் கூறியுள்ளனர்.