1000 ஆண்டுக்குப் பிறகு குருவால் உருவாகும் அபூர்வ நிகழ்வு; 2024 இவர்களுக்கு குபேர யோகமாம்!
1000 ஆண்டுகளுக்குப் பிறகு மூன்று கிரகங்களின் அபூர்வ சேர்க்கையால் சில ராசிக்காரர்கள் குபேர யோகம் பெறவுள்ளதாக ஜோதிடங்கள் கூறுகின்றதாம்.
அந்த வகையில் தற்போது சுமார் 1000 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தாண்டில் சனி, குரு மற்றும் ராகுவின் அபூர்வ சேர்க்கை நடக்கப் போகிறது. கிரகங்கள் அவ்வப்போது தங்கள் இயக்கத்தை மாற்றி அனைத்து ராசிகளையும் பாதிக்கின்றன.
வேத ஜோதிடத்தின்படி 2024 ஆம் ஆண்டு மிகவும் சிறப்பானதாக இருக்கும். புத்தாண்டில் பல கிரகங்கள் தங்கள் இயக்கத்தை மாற்றும். அதனால் பல சுப, அசுப யோகங்கள் உண்டாகும்.
அறிவு, செல்வம், கல்வி, சமயப் பணி, குழந்தைகள், திருமணம் போன்றவற்றுக்குக் காரணகர்த்தாவாக குரு கருதப்படுகிறார். மறுபுறம் சனி மற்றும் ராகு இரண்டும் அசுப கிரகங்களாக கருதப்படுகிறது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு மூன்று கிரகங்களின் சேர்க்கை
இரண்டு கிரகங்களின் தீய பார்வையும் அரசனை பாமரனாக மாற்றலாம். இந்நிலையில் 2024 ஆம் ஆண்டில், ராகு ஆண்டு முழுவதும் வியாழனின் ராசியான மீன ராசியில் இருப்பார்.
அதே சமயம் சனியும் மூல திரிகோண ராசியான கும்பத்தில் இருந்துகொண்டு அவ்வப்போது தன் இயக்கத்தை மாற்றிக் கொள்வார்.
மறுபுறம் மே 2024 வரை தேவ குரு வியாழன் மேஷ ராசியில் இருப்பார். அதன் பிறகு ரிஷப ராசியில் பெயர்ச்சி அடைவார். ஆனால் அவரது 7ம் பார்வை மீன ராசியில் தான் இருக்கும்.
ஜோதிடத்தின் படி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு மூன்று கிரகங்களின் சேர்க்கை நடக்கிறது.
இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்று பார்ப்போம். கிரகங்களின் சேர்க்கையால் இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும்
மேஷம் (Aries Zodiac Sign):
இந்த கிரகங்களின் சேர்க்கை மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். வருமானத்தில் அதிகரிப்பு காணலாம். பதவி, கௌரவத்தால் ஆதாயம் அடைவீர்கள். காதல் உறவுகள் வலுவடையும். இதுவரை நடக்காமல் இருந்த அனைத்து காரியங்களும் சுபமாக நடக்கத் தொடங்கும். குடும்பத்தில் சுபிட்சம் இருக்கும். திருமண வாய்ப்புகள் உண்டாகும். நீங்கள் வேலையில் வெற்றி பெறுவீர்கள், முன்னேற்றத்திற்கான பாதைகள் திறக்கப்படும்.
கும்பம் (Aquarius Zodiac Sign):
கும்ப ராசிக்காரர்களுக்கு அடுத்த வருடம் சிறப்பான பலன்கள் கிடைக்கும். செல்வம் பெருகும். உடல்நலம் மேம்படும், நோய்களிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். மாணவர்கள் வெற்றி பெறுவார்கள். நம்பிக்கை அதிகரிக்கும். பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் அமையும். மத நிகழ்ச்சிகளை வீட்டில் செய்யலாம். மாணவர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும்.
மீனம் (Pisces Zodiac Sign):
மீன ராசிக்காரர்களுக்கு ராகு, வியாழன் ஆகிய கிரகங்களின் சிறப்புப் பாக்கியம் கிடைக்கும். வெற்றி மற்றும் நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் இருக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் உண்டாகும். வெளியூர் பயண செல்வதற்கு திட்டமிடலாம். முதலீடு மூலம் லாபம் கிடைக்கலாம். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். புத்தாண்டில் நல்ல வாய்ப்புகள் அமையும்.