29 ஆண்டுகளுக்கு பின் புதியவரிடம் பதவியை ஒப்படைக்கும் ஜே.வி பி முக்கியஸ்தர்!

National People's Party Anura Kumara Dissanayaka Sri Lanka Politician
By Shankar Sep 29, 2024 01:01 PM GMT
Shankar

Shankar

Report

நான்சாகும்வரை ஜே.வி.பிகாரன்தான். இதில் மாற்றம் எதுவும் வராது. ஆனால் மரணிக்கும்வரை பதவியில் நீடிக்கவேண்டும் என்றில்லை. பொதுச்செயலாளர் பதவியை புதியவரிடம் கையளிக்க எதிர்பார்த்துள்ளேன்.” இவ்வாறு ஜே.வி.பி கட்சியின் செயலாளர் ரில்வின் சில்வா நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

பொதுத்தேர்தல் முடிந்ததும், அடுத்த வருடம் கட்சி மாநாட்டை நடத்தி இதற்குரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் அவர் கூறினார்.

29 ஆண்டுகளுக்கு பின் புதியவரிடம் பதவியை ஒப்படைக்கும் ஜே.வி பி முக்கியஸ்தர்! | After 29 Years Rilvin Silva Hand Over The Post

1978 ஆம் ஆண்டு ஜே.வி.பியில் இணைந்த ரில்வின் சில்வா, 1995 ஆம் ஆண்டு ஜே.வி.பியின் செயலாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

அன்று முதல் இன்றுவரை 29 வருடங்களாக அப்பதவியில் அவர் நீடிக்கின்றார். கட்சி செயற்பாடுகள் காரணமாக சிறைவாசமும் அனுபவித்துள்ளார்.

ஜே.வி.பிக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு, அக்கட்சியினர் ஜனநாயக வழிக்கு திரும்பிய பின்னர், கட்சியை மீளக் கட்டியெழுப்புவதில் ரில்வின் சில்வாவின் பங்களிப்பு அளப்பரியது.

29 ஆண்டுகளுக்கு பின் புதியவரிடம் பதவியை ஒப்படைக்கும் ஜே.வி பி முக்கியஸ்தர்! | After 29 Years Rilvin Silva Hand Over The Post

ஜே.வி.பி. அரசியல் ரீதியாக பின்னடைவுகளை சந்தித்தவேளைகளில் எல்லாம் கட்சி தோழர்களை உற்சாகப்படுத்தி கட்சியை ஒரு கட்டுப்கோப்பாக வழிநடத்தியவர்களில் ரில்வின் சில்வா பிரதானமானவர்.

ஜே.வி.பிக்குள் உள்ளக மோதல்கள் வெடித்த சந்தர்ப்பங்களில் கட்சி கட்டமைப்பு சிதைவடையக்கூடாது என்பதற்காக பல தியாகங்களை செய்தவர்.

ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றுள்ளது . ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தலைவராகியுள்ளார்.

29 ஆண்டுகளுக்கு பின் புதியவரிடம் பதவியை ஒப்படைக்கும் ஜே.வி பி முக்கியஸ்தர்! | After 29 Years Rilvin Silva Hand Over The Post

இந்நிலையில் அநுரவைபோலவே பலரும் ரில்வின் சில்வாவை பற்றியும் தேட ஆரம்பித்துள்ளனர். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் அவர் தனது கடந்த காலம் பற்றியும் விபரித்துள்ளார்.

இதன்போது இன்னும் எத்தனை வருடங்கள் ஜே.வி.பியின் பிரதான செயலாளராக இருக்கின்றீர்கள் எனக் கேள்வி எழுப்பட்டது,

இதற்கு பதிலளித்த அவர்,

“நான் சாகும்வரை ஜே.வி.பிகாரன்தான். உடலில் உயிர் இருக்கும்வரை அரசியலிலும் ஈடுபடுவேன். ஆனால் மரணிக்கும்வரை பதவி வகிக்க வேண்டும் என்றில்லை.

நீண்டகாலம் செயலாளர் பதவியில் இருந்துவிட்டேன், புதியவர் வரவேண்டும் எனக் கருதுகின்றேன். உடனடி மாற்றத்தை கட்சி தோழர்கள் விரும்பவில்லை.

பொதுத்தேர்தல் முடிந்த பிறகு, மாநாட்டை நடத்தி இதனை செய்யலாம். சிறப்பாக செயற்படக்கூடிய தோழர்கள் உள்ளனர் என ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும், அரசாங்கத்தில் எவ்வித பதவியையும் தான் ஏற்கமாட்டார் எனவும் அவர் கூறியுள்ளதாக குறித்த தகவலை முகநூலில் ராமசந்திரன் சனத் என்பவர் பதிவிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US