10 ஆண்டுகள் கழித்து குரு-சுக்கிரன் உருவாக்கும் திருஷ்டி யோகம் ; ஜாக்பாட் அடிக்கும் ராசி
10 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள குரு-சுக்கிரன் திருஷ்டி யோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.

இந்த யோகமானது நவம்பர் 03 ஆம் திகதி உருவாகவுள்ளது. இப்போது குரு சுக்கிரனால் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என நாம் இங்கு பார்ப்போம்.

ரிஷபம்
கேந்திர திருஷ்டி யோகத்தால் ரிஷப ராசிக்காரர்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. பணியிடத்தில் சூழல் சாதகமாக இருக்கும். சமூகத்தில் அந்தஸ்தும், கௌரவமும் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருக்கும். வணிகர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். நிறைய பணத்தை சேமிக்க முடியும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் கேந்திர திருஷ்டி யோகத்தால் வருமானத்தில் கணிசமான உயர்வைக் காண்பார்கள். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் எதிர்பாராத அளவில் லாபத்தைப் பெறுவார்கள். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள நேரிமும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்களும் உள்ளன.

தனுசு
கேந்திர திருஷ்டி யோகத்தால் தனுசு ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாயப்பு கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். எதிரிகளை வென்று வீழ்த்துவீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் கனவுகள் நனவாகும். ஊடகம், கல்வி தொடர்பான துறையில் இருப்பவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.

 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        