AFC ஆசியக் கிண்ண ஆரம்ப திகதி அறிவிப்பு!
AFC ஆசியக் கிண்ணம் 2027 ஜனவரி 7 ஆம் திகதி தொடங்கி பெப்ரவரி 5 ஆம் திகதி வரை நடைபெறும் என்று ஆசிய கால்பந்து கூட்டமைப்பு (AFC) செவ்வாயன்று அறிவித்தது.
மேலும், சவுதி அரேபியாவின் ஐந்து மைதானங்களில் (கிங் ஃபஹ்த் ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானம், கிங் சவுத் யுனிவர்சிட்டி மைதானம், இமாம் மொஹமட் இபின் சவுத் யுனிவர்சிட்டி மைதானம், கிங்டம் அரினா மற்றும் அல் ஷபாப் மைதானங்கள்) போட்டியை நடத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் AFC தெரிவித்துள்ளது.
போட்டியை நடத்துவதற்கான ஏலத்தில் இருந்து இந்தியா விலகியதைத் தொடர்ந்து, 2027 ஆம் ஆண்டு ஆசியக் கிண்ணப் போட்டிகளை சவுதி அரேபியா நடத்துவது உறுதியானது. போட்டியின் முந்தைய சீசனை கட்டார் நடத்தியது.
போட்டிக்காக பதினெட்டு நாடுகள் ஏற்கனவே தங்கள் இடங்களை உறுதி செய்துள்ளன. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மூன்றாம் சுற்று தகுதிச் சுற்றுகள் தொடங்குகின்றன.
இந்தியா சிங்கப்பூர், ஹங்கொங், பங்களாதேஷ் ஆகிய நாடுகள் சி பிரிவில் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.