சாம்பிராணி காட்டும் போது இந்த பொருட்களையும் சேர்த்து கொள்ளுங்கள்; செல்வம் பெருகும்!
வீட்டில் பூஜை செய்யும் போது தீப, தூப ஆராதனை செய்வது பழங்காலம் தொட்டு செய்து வரும் ஒரு பழக்கம்.
இந்த தூபம் போடும் போது இதில் சேர்க்கும் சாம்பிராணியின் வாசனைக்கு வீட்டில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் நீங்கி, மனம் தெளிவடைந்து நல்ல சிந்தனைகள் மேலாகுவதோடு தெய்வங்களின் அனுகிரகமும் கிடைக்கும். .
சகல ஐஸ்வர்யங்கள்
அத்தோடு இந்த தூபத்தில் மேலும் சில பொருட்களை சேர்ப்பதன் மூலம் மகாலட்சுமி தாயாரை நிரந்தரமாக நம் வீட்டில் தங்க வைத்து சகல ஐஸ்வர்யங்களை பெறலாம் என்று சொல்லப்படுகிறது.
வீட்டில் பூஜை செய்யும் வேளையில் சாம்பிராணி தூபம் போடுவதை நிச்சயமாக செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலமே பூஜையானது நிறைவு பெறும்.
சாம்பிராணி தூபம் வாசத்திற்கு சகல தெய்வங்களும் நம் இல்லம் தேடி வருவார்கள் என்றும் கூறப்படுகிறது.
தூபத்துடன் சேர்க்க வேண்டிய பொருட்கள்
வெண் குங்கிலியம்
இதில் இரு வகை உண்டு. இதில் வெண் குங்கிலியத்திற்கு அதிக இறை சக்தி உண்டு இந்த வெண்குங்கிலியத்தின் பவுடரை எடுத்து கொள்ள வேண்டும்.அத்தோடு வெட்டி வேர் தூள், நன்னாரி வேர் தூள் என்பவற்றை எடுத்து கொள்ள வேண்டும்.
சாம்பிராணி தூபம் போடும் போது இந்த மூன்று பவுடர்களையும் கலந்து போட்டால் வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் அனைத்தும் விலகுவதோடு மனமானது தெளிவு பெறும்.
மனம் ஒரு நிலையில் இல்லாமல் அலை பாய்ந்து கொண்டு ஏதாவது சிந்தனையில் இருந்தால் நம்மால் எந்த வேலையிலும் முழுமனதோடு ஈடுபட முடியாது.
இந்த தூபம் போடும் போது மனமானது தெளிவடைந்து நல்ல சிந்தனை அடைந்து மேலும் நம்மை நல்ல முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும் என்று சொல்லப்படுகிறது.
இந்த தூபத்தின் வாசனைக்கு அத்தனை இறை சக்தி உண்டு. அது மட்டுமின்றி இதில் சேர்த்த பவுடர்கள் அத்தனையும் நல்ல மனம் மிக்க தெய்வம்சம் கொண்ட பொருள்கள். இவைகளின் வாசத்திற்கு மகாலட்சுமி தாயார் நிச்சயமாக வந்த அமர்ந்து அருள் புரிவார் என்றும் கூறப்படுகிறது.
மனம் தெளிவாக ஒரு வேலையை நல்ல முறையில் துவங்கி அனைத்திலும் வெற்றி என்பது நிச்சயம் உண்டு. இத்தோடு பண வரவு ஏற்பட்டு வீட்டில் சகல ஐஸ்வர்யங்களும் வருவதற்கான வாய்ப்பையும் இந்த தூபம் ஏற்படுத்திக் கொடுக்கும் என்று கூறப்படுகிறது.