பாரதி கண்ணம்மாவில் இருந்து விலகிய நடிகை: அடுத்த காதநாயகி யார் தெரியுமா? குஷியில் ரசிகர்கள்
தமிழகத்தில் பிரபலமான தொலைக்காட்சியின் ஒன்றான விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியல் வித்யாசமான கதைக் கருவுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ரோஷினி ஹரிப்ரியன், தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து இவர் விலகுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இவரின் இந்த திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரம் என்பது ஒரு ஒரு சாதாரண பெண்ணாகவும், அதே நேரம் காதநாயகி கருப்பு நிற தோற்றத்தில் இருக்கும்படியாக கண்ணம்மா கதாபாத்திரத்தை வடிவமைத்துள்ளனர். திடீரென்று நடிகை ரோஷினி விளகுவதால் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமான கதாநாயகியை தேர்ந்தெடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
[
]
கண்ணம்மா காதபாத்திரத்திற்கு பல நடிகைகளை சீரியல் குழுவினர் தேர்வு செய்துள்ளனர். இறுதியாக நட்சத்திரா என்பவரை உறுதி செய்துள்ளனர். நட்சத்திரா ஏற்கனவே யாரடி நீ மோகினி சீரியலில் வெண்ணிலா என்ற காதபாத்திரத்தில் காதநாயகியாக நடித்துள்ளார். மேலும் அவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை தற்போது கண்ணம்மாவாக நடித்துள்ள ரோஷினி நிறைய காட்சிகளை நடித்திருப்பதால் அவை அனைத்தும் ஒளிபரப்பு செய்த பிறகு நட்சத்திரா கண்ணம்மாவாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.