நேபாளம் சென்ற பிரபல நடிகையின் பெற்றோர் மாயம்; சமூகவலைத்தளத்தில் கவலை!
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் கைலாஷ் மலைக்கு யாத்திரைக்கு சென்ற , நடிகை நிவேதா பெத்துராஜின் பெற்றோர்கள் காணமல் போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் கைலாஷ் மலைக்கு யாத்திரைக்கு சென்ற தனது பெற்றோர் ரமேஷ் சர்மா(65), மற்றும் நீலம் சர்மா(64) இருவரையும் காணவில்லை.. அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என நடிகர் நிவேதா பெத்தராஜ் சமூகவலைத்தங்களில் பதிவிட்டிருக்கிறார்.

நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளம்
மீட்பு குழுவினர், அரசு அதிபர்கள் ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக தன்னை தொடர்பு கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
அதில் பல இந்தியர்களும் அடக்கம். நேபாளம் ஒரு சுற்றுலா நாடு. அந்த வகையில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்தும் பலரும் அங்கு சுற்றுலா சென்ற நேரத்தில்தான் நேற்று பெருவெள்ளம் ஏற்பட்டு அதில் பலரும் சிக்கியிருக்கிறார்கள்.
பலரும் உயிரிழந்திருக்கிறார்கள். அதேபோல், தமிழகத்திலிருந்து நேபாளத்திற்கு சுற்றுலா சென்றவர்களில் 83 பேரை தொடர்பு கொள்ளமுடியவில்லை. அவர்களின் நிலை என்னவாயிருக்கும் என்கிற பதட்டம் பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. அவர்களை மீட்க தமிழக அரசும் முயற்சிகளை எடுத்து வருகிறது.