சுவிஸ் வாழ் யாழ் குடும்பஸ்தருடன் தலைமறைவான கிளிநொச்சி யுவதி; அழுது புலம்பும் காதலன்!
கிளிநொச்சியை சேர்ந்த 25 யுவதி ஒருவர், காதலனை கழற்றிவிட்டு சுவிஸ்வாழ் , விவாகரத்தான யாழ்ப்பாண குடும்பஸ்தருடன் சென்றுவிட்டதாக கூறப்படுகின்றது.
வவுனியா பல்கலைக்கழகத்தில் குறித்த யுவதி கற்று வந்ததுடன் அங்கு கல்வி கற்றுவந்த இளைஞன் ஒருவனை காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது.

பரீட்சைக்கு செல்வதாக ஏமாற்றிய காதலி
காதலனின் வீட்டு சூழ்நிலையால், இருவரின் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் திருமணம் செய்து கொள்ள இருந்ததாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த விவாகரத்தான சுவிஸ் குடும்பஸ்தர் கடந்த சில மாதங்களின் முன்னர் தாயகம் வந்ததாக கூறப்படுகின்றது. இதன்போது காதலனுக்கு தெரியாது , யுவதிக்கும் சுவிஸ் மாப்பிள்ளைக்கும் பதிவு திருமணம் இடம்பெற்றதாகவும் காதலன் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் காதலனிடம் கொழும்புக்கு தனியார் வங்கி ஒன்றில் பணிக்காக , பரீட்சை எழுத செல்வதாக கூறிச் சென்ற யுவதி ,சொல்லாமல் கொள்ளாமல் சுவிசர்லாந்திற்கு சென்றுவிட்டதாக காதலன் புலம்புவதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.