திடீரென மாயமான விஜய் மகளின் இன்ஸ்டாகிராம் பக்கம்
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய்யின் மகள் திவ்யா சாஷா பெயரில் பகிரப்பட்ட இன்ஸ்டாகிராம் பக்கம் தற்போது திடீரென மாயமாகியுள்ளமை இணையத்தில் பெரும் விவாதத்தை தோற்றுவித்துள்ளது.
சமீபகாலமாகவே தமிழக அரசியலில் த.வெ.க தலைவர் விஜய்யின் நகர்வுகள் உற்றுநோக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அவரது மகள் திவ்யா சாஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளதாக ஒரு ஸ்கிரீன்ஷாட் சமூக வலைதளங்களில் வைரலானது.

திவ்யா சாஷாவினுடையது தானா?
அதில், நடிகர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரப் புகைப்படத்தை பதிவிட்டு, அதற்குப் பின்னணியாக ‘கண்ணே மணியே கண்ணிமையே’ என்ற பாடலை அவர் இணைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. விஜய்யின் அரசியல் வருகைக்கு அவரது மகள் மௌனமாக ஆதரவு தெரிவிக்கிறார் என இரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.
இருப்பினும், அந்த இன்ஸ்டாகிராம் கணக்கு உண்மையிலேயே திவ்யா சாஷாவினுடையது தானா? அல்லது இரசிகர்களால் உருவாக்கப்பட்ட போலி கணக்கா? என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.
இந்த நிலையில், தற்போது அந்த குறிப்பிட்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தைத் தேடிப் பார்த்தால் 'User Not Found' என்று காண்பிக்கிறது. திடீரென அந்தப் பக்கம் நீக்கப்பட்டதா அல்லது முடக்கப்பட்டதா என்பது கண்டறியப்படவில்லை..