DMK தோல்விக்கு மேடையில் கண்ணீர் விட்ட சத்யராஜ்!
தமிழ் நாட்டின் முதலமைச்சராக விஜய் பதவியேற்ற நிலையில் துமிக கட்சியினரும் , அக்கட்சியின் ஆதரவளார்களும் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தி புலம்பி வருகின்றனர்.
அந்தவகையில் நடிகர் சத்யராஜ் தீவிர திமுக ஆதரவாளர் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். அவர் தேர்தலுக்கு முன் நடிகர் விஜய்யை மோசமாக விமர்சித்து பேசி இருந்தார்.

அப்பா சத்யராஜுக்கு பதிலடி
தேர்தலில் விஜய் மிகப்பெரிய வெற்றியை பெற்றார். அதே நேரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியை சந்தித்தார்.
அது பற்றி நடிகர் சத்யராஜ் நேற்று (05) மேடையில் பேசும்போது கண்ணீர் விட்டு அழுதார். "பட்டு திருந்தினால் தான் அறிவு வரும். எப்படி பட்ட தலைவரை தோற்கடித்துள்ளோம்" என மக்களை விமர்சித்தார் சத்யராஜ். முக ஸ்டாலின் தான் இன்றும் எங்களுக்கு முதலமைச்சர் எனவும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் சத்யராஜின் மகன் சிபிராஜ் விஜய்க்கு ஆதரவாக பதிவிட்டு இருக்கிறார். அதேவேளை சிபிராஜ் "Ignore Negativity" என அவர் விஜய் போட்டோவுடன் பதிவிட்டு அப்பா சத்யராஜுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.