கனடாவுக்கு அனுப்புவதாக கூறி இடைநடுவில் சித்திரவதை ; இலங்கையர்கள் தொடர்பில் பகீர் தகவல்
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் சென்று, மனித கடத்தல் வலையமைப்பில் சிக்கிய இலங்கையர்கள் தொடர்பில் பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையர்களை கனடாவுக்கு அனுப்புவதாக கூறி எத்தியோப்பியாவுக்கு அனுப்பி, அங்கு செயற்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற கும்பல்கள் மூலம் பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கும் நடவடிக்கை குறித்து அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் தகவல்
அவர்களை விடுவிப்பதற்காக தலா 30,000 அமெரிக்க டொலர்களை கப்பமாக கோரிய சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுக்க கொழும்பு பிரதான நீதவான் அசங்க போதரகம, குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நேற்று அனுமதி வழங்கியுள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் மனித வர்த்தகம், கடத்தல் மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் இந்தச் சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் தகவல் வெளியிட்ட போதே பிரதான நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார். முறைப்பாட்டாளர் தரப்பில் முன்னிலையான குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் தகவல் முன்வைத்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன