நடிகை ஓவியா குறித்து சர்ச்சையாக பேசிய நடிகர் பயில்வான் ரங்கநாதன்! கோபமடைந்த சின்மயி
நடிகை ஓவியா உள்ளிட்ட பல நடிகைகள் தவறான தொழில் செய்வதாக நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் சர்ச்சையாக பேசியுள்ளார்.
மேலும் இதற்கு நடிகை ஓவியா, சின்மயி உள்ளிட்டவர்கள் கடும் கோபத்துடன் பதிலடி கொடுத்துள்ளார்.
பிரபல பத்திரிகையாளரும் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவருமாகிய பயில்வான் ரங்கநாதன் எப்போதும் சர்ச்சையாக பேசுபவர்.
அவர் தற்போது சில நடிகைகள் தவறான தொழில் செய்து சினிமாவில் இருந்து ஒதுங்கினார்கள் என பேட்டியில் பேசி இருக்கிறார்.
ஓவியா பற்றி பேசிய அவர் ‘நடிப்பு திறமை இருந்தும் வேற மாதிரி வருமானத்தை ஈட்ட சம்மதித்து , அந்த வழி சென்றதால் ஓவியா சினிமாவில் இருந்து ஒதுங்கினார். மகாபலிபுரத்தில் அவர் தாங்காத இடமே இல்லை’ என குறிப்பிட்டு இருக்கிறார்.
This is what non sexual women harassment!#WomensRights !
— Oviyaa (@OviyaaSweetz) September 14, 2021
டார்ச்சர் செய்ததால் சினிமாவை விட்டு ஓடிய நடிகைகள் | Bayilvan Ranganathan... https://t.co/nyoBlA1UAq via @YouTube
இந்த பேட்டியை பார்த்து கொந்தளித்த நடிகை ஓவியா மிகவும் கோபமாக ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். “This is what non sexual women harassment! #WomensRights !” என தெரிவித்து உள்ளார் அவர்.
ஓவியாவுக்கு ஆதரவாக சின்மயியும் பேசி இருக்கிறார். “This man has been like this forever. Still gets hired because of the audience that are like him” என சின்மயி குறிப்பிட்டு உள்ளார்.