தனியார் வகுப்பு ஆசிரியரை கைது செய்ய நடவடிக்கை
தென்னிலங்கையில் மாணவர்களை தாக்கும் தனியார் வகுப்பு ஆசிரியரை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
குறித்த ஆசிரியர் மாணவர்களை தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய காணொளி
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் ஆணையத்தின் முன் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டும் அவர் வராததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
யோஷித ஹெட்டியாராச்சி என்ற தனியார் வகுப்பு ஆசிரியர், வகுப்பின் போது மாணவர்களை தாக்கும் விதமும், மாணவி ஒருவரை வைத்து மற்றொரு மாணவரை தாக்கும் படி அறிவுறுத்தும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.
இது தொடர்பாக நேற்று (11) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் நளின் ஜயதிஸ்ஸவிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அவர், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.