கட்சித் தலைவர்கள் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்!
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியை தீர்க்கும் தேசிய சபை ஒன்றை அமைப்பதற்கு நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் தீர்மானம் எடுத்துள்ளனர்.
இன்றைய தினம் (07-09-2022) நாடாளுமன்றத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதன்படி நாடாளுமன்ற சபாநாயகர் சபையின் தலைவராக இருப்பார். இதனை தவிர பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், சபைத் தலைவர் மற்றும் அரசாங்கத்தின் பிரதம அமைப்பாளர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர்.
குறிப்பாக, நாடாளுமன்றத்தில் அனைத்து அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 37 பேரை இந்த தேசிய சபை உள்ளடக்கும்.
இந்த நிலையில் இது தொடர்பான முன்மொழிவுகளை உடனடியாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க கட்சித் தலைவர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.