இரவிலும் கூடும் எதிர் தரப்பு ; அரசாங்கத்திற்கு எதிரான பேரணிக்காக தீவிரமாகும் நடவடிக்கை
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருக்கும் இடையில் இன்று (12) விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பு ப்ளவர் வீதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதியும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிரான பேரணி
எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் இடம்பெறவுள்ள அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த விசேட சந்திப்பில் கலந்துகொண்டதன் பின்னர் கருத்து வௌியிட்ட ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, வாக்குறுதிகளை வழங்கியவாறு அதனை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதனை விடுத்து கெப் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பிலேயே கவனம் செலுத்தியுள்ளது.எனவே அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிக்கும் வகையில் இந்த எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்படும்.
இதில் ஐக்கிய தேசிய கட்சியும் தமது பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.