நாட்டில் மின்வெட்டு நேரங்களில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்
தற்போது நிலவும் மின் நெருக்கடி காரணமாக கொழும்பின் முன்னுரிமைப் பிரதேசம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் இன்று முதல் எதிர்வரும் 08 ஆம் திகதி வரை தினமும் 6 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அதன்படி,A முதல் F வரையிலான மண்டலங்களில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை 4 மணி நேரமும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை 2 மணி நேரம் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
G முதல் L வரையிலான மண்டலங்களுக்கு மதியம் 1 மணி முதல் 5 மணி வரை 4 மணி நேரமும், இரவு 07.30 மணி முதல் இரவு 10 மணி வரை 2 மணி நேரம் 30 நிமிடங்களும் மின்வெட்டு நீடிக்கும்.
மேலும், கொழும்பின் முன்னுரிமைப் பகுதியில் எதிர்வரும் 8ஆம் திகதி வரை 3 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.