முல்லைத்தீவு மாவீரர் துயிலும் இல்லம் ஆமிக்கா? ஆவேசமான பொது மக்கள்!!
முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியை தனிநபரிடமிருந்து இராணுவத்துக்கு சுவீகரிப்பதற்கான நில அளவீட்டு பணி வியாழக்கிழமை (18) இடம்பெறவிருந்த நிலையில் குறித்த அளவீட்டு பணிகள் பொதுமக்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளன.
முல்லைத்தீவு நில அளவை திணைக்கள அதிகாரிகள் நில அளவீட்டு பணிக்காக துயிலும் இல்ல காணிக்கு சென்றபோது அங்கு மக்கள் கூடினர். இந்த இடத்தில் நாம் எமது உறவுகளை புதைத்துள்ளோம்.
இந்த காணியை அளவிட அனுமதிக்க மாட்டோம் என பொதுமக்கள் தடுத்ததன் அடிப்படையில் அளவீட்டு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
குறித்த இடத்தில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் சமூக செயற்ப்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் ஆகியோரும் மக்களுடன் இணைந்திருந்தனர்.