கிளிநொச்சியில் 42 பேரின் உயிரை பறித்த விபத்துகள்
கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வருடம் விபத்துக்களால் 42 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளது.
வீதியில் பயணித்துக் கொண்டிருப்பவர்கள் சடுதியாக திரும்புதல் மற்றும், வீதி நடைமுறைகளை முறையாக கடைப்பிடிக்காமை போன்ற விபத்துக்கள் அதிகரித்து வருவதாகவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சாரதி அனுமதி பத்திரம் வழங்கும்பொழுது வீதியை கடக்க முற்படுவது தொடர்பில் கடுமையாக அவதானம் செலுத்த வே்ணடும் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
இதேவேளை கிளிநொச்சி நகரில் விபத்துக்கள் இடம்பெறுவது குறைவாக உள்ள நிலையில், நகரிற்கு அப்பால் உள்ள கரடிபோக்கு தொடக்கம் பளை வரையான பகுதியிலும், 155ம் கட்டை தொடக்கம் இரணைமடு சந்தி வரையிலும் விபத்துக்கள் அதிகம் இடம்பெற்றுள்ளதாகவும் க பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இலங்கை முழுவதும் 70 கிலோ மீட்டர் வேகத்துக்குட்பட்டதாகவே வீதிகள் காணப்படுவதாகவும், அதனை மீறி பயணிப்பதாலேயே அதிக விபத்துக்கள் இடம்பெறுவதாகவும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் தெரிவித்தனர்.