திருமண வைபவத்தில் இருந்து திரும்பிய முச்சக்கரவண்டி விபத்து
ஹட்டனில் வேகமாக பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியில் இருந்து விலகி விபத்துக்குள்ளான சம்பவமொன்று இடம் பெற்றுள்ளது.
ஹட்டன், குடாகம பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை (10) இரவு இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தின் காரணம்
கொட்டகலையில் இடம்பெற்ற திருமண வைபவமொன்றில் பங்கேற்றவர்களை இறக்கிவிட்டு, அங்கிருந்த வட்டவளையை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளது.
சம்பவத்தின் போது முச்சக்கரவண்டி சாரதி மட்டுமே இருந்துள்ள நிலையில் அவரின் நித்திரை கலக்கமே இவ் விபத்தின் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓட்டோ கடுமையான சேதத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்த ஹட்டன் போக்குவரத்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.