திருக்கோணமலையில் விபத்து ; வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்
திருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நபர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உப்பு வெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து சம்பவம் இன்று (06)மாலை இடம்பெற்றுள்ளது.
விபத்தில் திருகோணமலை உப்பு வெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை கண்டி பிரதான வீதியின் 5ம் கட்டை பகுதியில் வேனுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்த நபர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உப்பு வெளி பொலிஸார் கூறினர்.
இவ்வாறு காயங்களுக்கு உள்ளானவர் திருகோணமலை தலைமையகப் பொலிசில் கடமையாற்றி வரும் சீனக்குடாவை வசிப்பிடமாகக் கொண்ட 35 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு படுகாயம் அடைந்துள்ளார்.