மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தருக்கு எமனான இ.போச!
இ.போ.ச பேருந்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பன்னிபிட்டிய, ஹைலெவல் வீதியைச் சேர்ந்த உஜித் பெரேரா என்ற 43 வயதுடைய நபரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிலியந்தலையில் இருந்து கட்டுபெத்த நோக்கி பயணித்த பாடசாலை பேரூந்து, எதிர் திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது.
இதில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பிலியந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பிலியந்தலை மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார்.
விபத்தில் மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்துள்ளதுடன் பேருந்தும் சேதமடைந்துள்ளது.
விபத்து தொடர்பில் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன், பிலியந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.