தமிழர் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து: ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு
வவுனியா - செட்டிகுளம் தட்டாங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் இன்றைய தினம் (25-01-2023) மாலை இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
செட்டிகுளம் பகுதியில் இருந்து பூவரசங்குளம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இளைஞர் தட்டாங்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்துகொண்டிருந்த கன்ரர் வாகனத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.
விபத்தில் படுகாயமடைந்த நபர் உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இருப்பினும், சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். சம்பவத்தில் ரங்கெத்கம பகுதியை சேர்ந்த நந்தன கிருசாந்த வயது 41 என்ற நபரே மரணமடைந்தார்.
விபத்து தொடர்பான விசராணைகளை செட்டிகுளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.