கொழும்பு லுனாவ பகுதியில் இடம்பெற்ற விபத்து ; 21 வயது இளைஞர் உயிரிழப்பு
கொழும்பு மொறட்டுவை, லுனாவ கடற்கரை வீதியின் லுனாவ நாற்சந்திப் பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
இவ்வாறு உயிரிழந்தவர் பதுளை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞராவார்.

மொறட்டுவையை நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று, லுனாவ நாற்சந்தியில் 'U' திருப்பம் (U-turn) செய்ய முயன்ற போது மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்துடன் தொடர்புடைய முச்சக்கரவண்டிச் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மொறட்டுவைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.