யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்து... நபரொருவர் வைத்தியசாலையில் அனுமதி!
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
Teachers
By Shankar
யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற வீதி விபத்தில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து சம்பவம் இன்றையதினம் (03-11-2024) சத்திரச்சந்திப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
துவிச்சக்கரவண்டியில் பயணம் செய்த நபர் கீழே வீழ்ந்த நிலையில், வீதியால் வந்த வவுசர் ஒன்று அவரது காலின் மேல் ஏறியதில் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டு படுகாயமடைந்துள்ளார்.
மேலும், சம்பவ இடத்திற்கு வருகைதந்த பொலிஸார் வந்து விசாரணைகளை மேற்கொண்டதுடன் படுகாயமடைந்த நபரை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US