மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் திறன் மொட்டுக்கே உள்ளது!
மஹிந்த ராஜபக்சவின் பெயரை பிரதான பலமாக கொண்டு இந்த நாட்டில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் திறன் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு இருப்பதாக பொதுஜன முன்னணியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சாகர காரியவசம் இக்கருத்தினை வெளியிட்டார்.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் மஹிந்த ரராஜபக்சவுக்கு இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்களின் அன்பும் மரியாதையும் இன்னும் இருக்கின்றதாகவும் அவர் கூறினார்.
எதிர்வரும் தேர்தல் செயற்பாடுகள் உட்பட ஏனைய அனைத்து வேலைத் திட்டங்களுக்கும் கட்சியின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்சவின் பங்களிப்பு தீவிரமாக இருக்கும். அத்தேர்தலில் பொதுஜன முன்னணி வெற்றிபெறும் எனவும் அவர் இதன்போது மேலும் தெரிவி்த்தார்.