யாழில் பிரான்ஸிலிருந்து வந்த இளைஞனுக்கு அரங்கேற்றப்பட்ட கொடூரம் ; தொலைபேசி அழைப்பால் வந்த வினை
யாழ்ப்பாணம் - வடமராட்சி, கரணவாய் கூடாவளவு பகுதியில் இளைஞர் ஒருவர் நேற்று இரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்டவர் 29 வயதுடைய பிரான்ஸ் நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தீவிர விசாரணை
குறித்த நபருக்கு தொலைபேசி அழைப்பொன்று வந்ததாகவும் அதன் பின்னர் கொலை செய்யப்பட்ட நபர் மோட்டார் சைக்கிளில் வீட்டை விட்டு வெளியேறியதாக தெரியவந்துள்ளது.
வீடு திரும்பாததால் தேடியபோது, வீட்டின் அருகே உள்ள வீதியில் வெட்டுக்காயங்களுடன் கிடந்துள்ளதுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணை தற்போது சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்