விபத்தில் இளைஞன் உயிரிழப்பு
Batticaloa
Sri Lanka Police Investigation
Accident
Death
By Sulokshi
மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த இளைஞர் செங்கலடி – பதுளை பிரதான வீதியிலுள்ள பங்குளாவடி, புளியடிச்சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் 18 வயதுடைய சதுர்ஷன் என்ற நபரே உயிரிழந்துள்ளார் .
அதேவேளை இந்த விபத்து சம்பவத்தில் காயமடைந்த இருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US