சிறீதரனுக்கு எதிராக பயணத் தடையா? குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் கெடுபிடிகள்

Bandaranaike International Airport Colombo S. Sritharan Chennai
By Sahana Jan 11, 2025 01:50 AM GMT
Report

சென்னை செல்வதற்காக வெள்ளிக்கிழமை (10) கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்குச்சென்ற இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு எதிராகப் பயணத்தடை அமுலில் இருப்பதாகக் குறிப்பிட்டு, குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் அவரை நீண்டநேரம் கெடுபிடிகளுக்கு உட்படுத்தியுள்ளனர்.

நாட்டில் 90 வகையான மருந்துகளின் விலைகளை குறைக்கத் திட்டம்

நாட்டில் 90 வகையான மருந்துகளின் விலைகளை குறைக்கத் திட்டம்

தமிழக அரசின் ஏற்பாட்டில் இன்றும் (11), நாளையும் (12) நந்தம்பாக்கத்தில் அமைந்துள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறவுள்ள அயலகத் தமிழர் தினம் - 2025 நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக தமிழக அரசின் அழைப்பின்கீழ் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன் நேற்று வெள்ளிக்கிழமை (10) சென்னைக்குப் பயணமானார்.

சிறீதரனுக்கு எதிராக பயணத் தடையா? குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் கெடுபிடிகள் | A Travel Ban Against Siridaran

அதன்படி வெள்ளிக்கிழமை (10) மாலை சென்னைக்குப் புறப்படுவதற்காக கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்குச் சென்ற சிறிதரன், அங்கு குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால் மிகையான கெடுபிடிகளுக்கு உட்படுத்தப்பட்டார்.

சிறிதரனுக்கு எதிராகப் பயணத்தடை அமுலில் இருப்பதாகவும், எனவே அவரை சென்னை செல்வதற்கு அனுமதிக்கமுடியாது எனவும் குறிப்பிட்ட அவ்வதிகாரிகள், இதுகுறித்து குற்றப்புலனாய்வுப்பிரிவு அதிகாரிகளால் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

சிறீதரனுக்கு எதிராக பயணத் தடையா? குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் கெடுபிடிகள் | A Travel Ban Against Siridaran

இவ்வேளையில் சென்னையில் நடைபெறவிருக்கும் அயலகத் தமிழர் தின நிகழ்வுக்குச் செல்வதற்காக விமானநிலையத்துக்கு வருகைதந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அதிகாரிகளிடம் இதுபற்றி விளக்கம் கோரினார்.

இருப்பினும் சிறிதரனுக்கு எதிராகப் பயணத்தடை அமுலில் இருப்பதாகக் கூறிய அதிகாரிகள், அதுபற்றிய விபரம் எதனையும் கூறவில்லை.

பின்னர் நாடு திரும்பியதும் குற்றப்புலனாய்வுப்பிரிவு அதிகாரிகளால் விசாரணைகள் நடத்தப்படும் எனக்கூறி, சிறிதரனை சென்னை செல்வதற்கு அனுமதித்தனர்.

தமிழரசுக்கட்சியில் இருந்து மத்தியகுழு உறுப்பினரை நீக்கும் அதிகாரம் ; சிவமோகன் பகிரங்கம்

தமிழரசுக்கட்சியில் இருந்து மத்தியகுழு உறுப்பினரை நீக்கும் அதிகாரம் ; சிவமோகன் பகிரங்கம்

மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US