இந்தியாவில் 2 விமானங்கள் உரசியதால் பரபரப்பு
இந்தியாவில் 2 விமானங்கள் உரசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளதாவது,
இந்தியாவில் மராட்டிய மாநிலம் மும்பை விமான நிலையத்தில் இருந்து கோவைக்கு செவ்வாய்க்கிழமை (03) இரவு எயார் இந்தியா விமானம் புறப்பட தயாரானது. விமானத்தில் பயணிகள் அனைவரும் ஏறியதை தொடர்ந்து விமானம் புறப்பட ஓடுதளத்திற்கு சென்றுகொண்டிருந்தது.

ஒன்றோடு ஒன்று லேசாக மோதிய இறக்கை முனைகள்
அப்போது, ஐதராபாத்தில் இருந்து மும்பை வந்த இண்டிகோ விமானம் ஓடுதளத்தில் இருந்து விமானத்தை நிறுத்தும் பகுதிக்கு சென்று கொண்டிருந்தது.
அப்போது, இரு விமானங்களின் வலது பக்க இறக்கை முனைகள் ஒன்றோடு ஒன்று லேசாக மோதியதாக விமான போக்குவரத்து அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இரு விமானங்களின் வேகம் மிகக் குறைவாக இருந்ததால் பெரும் சேதம் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், பாதுகாப்பு காரணமாக இரு விமானங்களும் உடனடியாக விமானங்கள் நிறுத்தும் பகுதிக்கு திரும்ப கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.