தாயகத்தில் விழிப்புலன் அற்ற முதியவர் ஒருவரின் கண்ணீர்க்கதை (Video)
கோர யுத்தம் முடிவடைந்தபோதும் ஈழத்தில் வாழும் எம் மக்களின் வாழ்வினில் வசந்தம் என்பது இன்னும் வந்தபாடில்லை.
போரின் வடுக்கள், கொரோனா, பொருளாதார நெருக்கடி என எம்மக்கள் படும் துன்பங்கள் வார்த்தைகளில் கூறமுடியாது. உணவு, உடை உறையுள் இந்த மூன்றும் ஒரு மனிதனின் அடைப்படை தேவைகள ஆகும்.
அந்த தேவைகளைக்கூட நிறைவேற்றிக்கொள்ளமுடியாத நிலையில் பலர் வாடி வருகின்றனர். இந்நிலையில் தகர கொட்டகையின் கீழ் முறிகண்டி- அரை ஏக்கர் எனும் கிராமத்தில் விழிப்புலன் அற்ற முதியவரும் அவரது மனைவியும் படும் கஸ்ரங்கள் இக்காணொளி ஊடாக காணமுடிகின்றது.
பல்வேறு துன்பங்கள் துயரங்களுக்கு மத்தியில் வாழ்ந்துவருகின்றனர். அந்தவகையில் முறிகண்டிப்பகுதியில் வயோதிப தம்பதிகளின் இன்னல்களை எடுத்துக்கூறுவதாக இந்த உறவுப்பாலம் நிகழ்ச்சி அமைந்துள்ளது.