யாழில் வீடொன்றிலிருந்து அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம் ; தீவிர விசாரணையில் பொலிஸார்
யாழ். மயிலங்காடு வீதி புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியில் தனியாக வீட்டில் வசித்து வந்த ஓய்வு நிலை அதிபர் ஒருவர் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
இதன்போது வேலாயுதர் பாலசுப்பிரமணியம் (வயது 68) என்பவரே இன்று(31) இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் மனைவியை பிரிந்து கடந்த 10 ஆண்டுகள் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வீட்டை விட்டு சென்றவர்கள் தமது பொருட்களை எடுப்பதற்கு வீட்டுக்கு வந்தவேளை அந்த நபர் நிர்வாண நிலையில் வீட்டினுள் சடலமாக காணப்பட்டுள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜேயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.
இதனையடுத்து சடலமானது மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.