அழிந்துவரும் அரிய வகை சிறுத்தை சுட்டுக்கொலை
மொனராகலையில் அழிந்துவரும் அரிய வகை இனத்தைச் சேர்ந்த சிறுத்தை ஒன்று, புதுருவாகல நீர்த்தேக்கப் பகுதிக்குள் உள்ள மீகல் ஆர பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது.
விசேட விசாரணை
வெல்லவாய வனவிலங்கு அலுவலக அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின்படி, அப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் கொல்லப்பட்ட சிறுத்தையின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. அத்துடன் சந்தேகநபர்கள் சிறுத்தையைக் கொன்றதன் பின்னர் அதன் பற்களை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக வனவிலங்கு அதிகாரிகள் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.