தையிட்டி விவகாரம் மக்களின் கோரிக்கைக்கு விரைவானத் தீர்வு ! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
யாழ்ப்பாணம் தையிட்டி விகாரை அமைக்கப்பட்டுள்ள காணிகள் விடுவிப்புக் குறித்து சாதகமான நிலமை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (29.07.2023) சனிக்கிழமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா , விகாராதிபதி ஜின்தோட்ட நந்தராமவை சந்தித்த நிலையில் சந்திப்புத் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தெரிவிக்கையில்,
தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியில் உள்ள தனியார் காணிகளை விடுவிப்பதுக் குறித்து இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட கருத்தாடலின் பின்னர் சாதகமான தீர்வு கிடைக்கப்பெறும் எனத் தெரிவித்துள்ளார்.
அத்தோடு இதுகுறித்து மாவட்டக் கட்டளைத் தளபதி , பிரதேச செயலாளர் ,மற்றும் நில அளவையாளர் ஆகியோருடனும் தொலைப்பேசியினூடாகத் தொடர்புக் கொள்ளவுள்ளதாகத் தெரிவித்தார்.