யாழில் மீட்கப்பட்ட சக்தி வாய்ந்த வெடிபொருள்!
யாழ்ப்பாணம் குருநகர் ஜெட்டி பகுதியில், கடற்படையினரால் ஒரு கிலோ கிராம் TNT வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் குருநகர் ஜெட்டி பகுதியில் வடக்கு கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் இந்த சக்தி வாய்ந்த வெடிபொருள் சிக்கியுள்ளது.
தென்னந்தோப்பில் சந்தேகத்துக்கிடமான பொதி
அப்பகுதிக்கு அருகிலுள்ள தென்னந்தோப்பு ஒன்றில் சந்தேகத்துக்கிடமான பொதி ஒன்று காணப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. இதன்போதே குறித்த பொதியில் சுமார் ஒரு கிலோவும் 950 கிராமும் கொண்ட TNT மற்றும் நூலையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
வெடிமருந்துகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்காக அவை மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.
மீட்கப்பட்ட வெடிபொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்படையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.