குளித்துக் கொண்டிருந்தவர் சுட்டுக் கொலை; அம்பாறையில் பயங்கரம்
அம்பாறை, பண்டாரதுவ, மாயாதுன்ன பிரதேசத்தில் குளித்துக் கொண்டிருந்தவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றது. குறித்த நபர் வீட்டின் பின்னால் குளித்துக் கொண்டிருந்ததாகவும் திடீரென வந்த நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நில ஏற்பட்ட தகராறில் கொலை
நிலம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்துள்ள பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் 42 வயதுடைய வெரன்கெட்டகொட, மாயதுன்ன பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குற்றத்தைச் செய்த சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை பண்டாரதுவ பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.