இயக்கச்சி றீச்சாவில் மக்களுக்கு காத்திருக்கும் புதிய அனுபவம்
இலங்கை மக்களுக்கு புதிய அனுபவத்தை வழங்க காத்திருக்கும் ReeCha Organic Farm.
கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் , அமைந்துள்ள ReeCha Organic Farm இலங்கையின் சுற்றுலா தளங்களுள் ஒன்றாக நம் நாட்டு மக்களிடையே மட்டுமல்லாது புலம்பெயர் தமிழ மக்களிடையேயும் வெகு பிரபலமடைந்துள்ளது.
அரிய வாய்ப்பு
ஹோட்டல்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தரத்திலான உணவகங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள், சிறுவர் விளையாட்டுத்திடல்கள், நீச்சல் தடாகங்கள் என அத்துனை அம்சங்களை உள்ளடக்கியுள்ளது ReeCha Organic Farm.
கிராமத்தில், சர்வதேச தரத்தில் ஒரு பண்ணையை அமைத்து, அதில் பலநூறுபேருக்கு வேலை வாய்ப்பை கொடுக்கும் சிறந்த இடமாகவும் ReeCha Organic Farm உள்ளது.
இத்தகைய ReeCha Organic Farmஇல் பெறுமதி மிக்க மாதுளம் பழங்கள் அமோக விளைச்சலை பதிவு செய்துள்ளன.
இன்னும் இரு வாரங்களில் தாமாகவே பழங்களை பறித்து சுவைக்க கூடிய அரிய வாய்ப்பு இலங்கை மக்களுக்கு காத்திருக்கின்றது.