விக்கியுடன் கைகோர்க்கும் புதிய கூட்டணி!
தமிழரசு கட்சி இல்லாத தமிழ்தேசிய கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக தொியவருகின்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் அணிகள் கூட்டாக இணைந்து, தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனுடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டிருக்கின்றனர்.
பேச்சு வார்த்தை
இன்று கொழும்பில் இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சி தான் தனித்துச் செல்ல உள்ளதாக தெரிவித்த நிலையில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான பேச்சுவார்த்தைகள் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் இடம்பெறுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இதுவரை பதிவு செய்யப்படாத தமிழ்தேசிய கூட்டமைப்பை தமிழரசு கட்சி தவிர்ந்த தமிழ்தேசியம் சார்ந்து பயணிக்கின்ற கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டமைப்பை உத்தியோகபூர்வமாக அறிவிப்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது.