வயோதிப பெண்ணிடம் இரு ஆண்களின் மோசமான செயல்; மட்டக்களப்பில் சம்பவம்
மட்டக்களப்பில் வயோதிப பெண்ணொருவருக்கு தன்னுடைய மர்ம உறுப்பை காண்பித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு புதூர் பிரதேசத்தில் வாள்வெட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் இருந்து வீடு சென்ற இளைஞனின் வீட்டை வாள்வெட்டுக்குழுவினர் முற்றுகையிட சென்றனர்.
இதன்போது அவர்களை தடுத்து நிறுத்திய வயோதிப பெண் ஒருவரிடமே இவ்வாறு மோசமான செயலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இளைஞர் மீது தாக்குதல்
சம்பவம் தொடர்பில் குண்டா வாள்வெட்டுக்குழுவைச் சேர்ந்த இருவரை திங்கட்கிழமை (8) கைது செய்துள்ள நிலையில் இருவர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
4 பேர் கொண்ட வாள்வெட்டு குழு அந்த பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் மீது கடந்த 2ம் திகதி வாள்வெட்டுதாக்குதல் மேற்கொண்டதில் இளைஞர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று இளைஞன் திங்கட்கிழமை (08) வீடு திரும்பிய நிலையில் இளைஞனின் வீட்டை வாள்வெட்டுக் குழுவினர் முற்றுகையிட்டனர்.
பொலிசில் முறைப்பாடு
இதன்போது குழுவினருக்கும் இளைஞனின் உறவினருக்கும் இடையே பெரும் வாக்குவதம் ஏற்பட்து. தாக்குதலுக்குள்ளான இளைஞனின் அம்மாவான 64 வயோதிப பெண் வெளியில் வந்து குண்டாகுழுவினரை வீட்டுக்குள் உள் நுழைய விடாது தடுத்து நிறுத்தினார்.
இதன்போதே 34 வயதுடைய நபர் தனது காற்சட்டையை கழற்றி வயோதிப பெண்ணுக்கு தனது ஆண்ணுறுப்பை காண்பித்துள்ளனார்.
இச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட வயோதிப பெண் முறைப்பாட்டையடுத்து சந்தேக நபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்ததுடன் இருவர் தொடர்ந்தும் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.