வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மூன்று பிள்ளைகளின் தாயார்
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் தொடர்ச்சியான கடும் மழை காரணமாக, ஊவா பரணகம தேர்தல் தொகுதிக்குட்பட்ட கலஹகம பகுதியில் சீதா ஓயாவைக் கடக்க முற்பட்ட பெண்ணொருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.
நேற்று (14) மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில், தெல்ஹவாடிகம பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான குறித்த பெண், மூன்று பிள்ளைகளின் தாயார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த அவர், மேலும் ஐந்து பேருடன் இணைந்து சீதா ஓயாவைக் கடக்க முற்பட்டுள்ளார்.
இதன்போது ஏற்பட்ட பலத்த நீரோட்டத்தில் அவர் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காணாமல் போன பெண்ணைத் தேடும் பணிகளில் பிரதேச மக்களும் பொலிஸாரும் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர். எனினும், இதுவரை அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.