இந்த காலத்தில் இப்படி ஒரு தாயா? பலரையும் வியக்கவைத்த பெண்!
இந்த காலத்தில் குழந்தைகளுக்கு தாய்பால் கொடுக்காமல் இருந்து வரும் நிலையில் 39 வயது பெண் ஒருவர் பள்ளி செல்லும் தனது குழந்தைக்கு தாய்பால் கொடுத்து வரும் நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த தாய் ஒருவரே இவ்வாறு பள்ளி செல்லும் தனது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்து வருகின்றார். த 39 வயது ஷார்லி வேன்கே என்பவர் தனது ஐந்து மற்றும் ஆறு வயது மகன்களுக்கு தற்போதும் தாய்ப்பால் கொடுத்து வருன்றார்.
இதுகுறித்து பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு ஷார்லி பேட்டி அளித்த , தாய்ப்பால் கொடுப்பதை பெற்றொருக்கான கருவியாக பார்ப்பதாகவும், குழந்தையை அமைதிப்படுத்தவும், அழும் போது அல்லது நோய்வாய்ப்படும் போதும் தாய்ப்பால் அவர்களுக்கு ஆறுதலாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது முதல் மகனுக்கு 3 வயது வயது இருக்கும் போதே தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த முயற்சி செய்ததாகவும், எனினும் குழந்தை 10 வயது வரை தான் தாய்ப்பால் குடிக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் தாய் பால் தங்களுக்குள் இருக்கும் பாசத்தையும் நெருக்கத்தையும் அதிகரிப்பதாகவும், தான் எப்போதும் ஒரு அம்மாவாக ஆறுதல் கொடுப்பேன் என்றும் பெருமிதமாக கூறினார் 39 வயது ஷார்லி .