மருத்துவ உலகின் வினோதம் ; இரண்டு ஆண்குறிகளுடன் பிறந்த பச்சிளம் குழந்தை
மருத்துவ உலகில் பல வினோத சம்பவங்கள் நடக்கும். நாம் யோசித்துக் கூட பார்க்காத பல வினோதங்கள் நடக்கும். அப்படியொரு வினோதமான சம்பவம் தான் பாகிஸ்தானில் நடந்துள்ளது.
மருத்துவமனையில் பிறந்த ஒரு பச்சிளம் குழந்தைக்கு இரண்டு ஆண்குறிகள் இருந்துள்ளன. இரண்டுமே முழுமையாக வளர்ந்த நிலையிலும் செயல்படும் நிலையில் இருந்துள்ளன.
இதைத் தான் மருத்துவர்கள் 'டிஃபாலியா' என்று குறிப்பிடுகிறார்கள். பாகிஸ்தானில் கடந்த 2023ல் பிறந்த குழந்தைக்கு இந்த அரிய மருத்துவ சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும், அந்த குழந்தைக்கு அப்போது ஆசனவாயும் இல்லையாம். குழந்தையை பார்த்த சிலர் அக்குழந்தை வினோதமாக ஏலியன் போல இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.
இதனால் பிறந்த சில மணி நேரத்திலேயே அந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சையும் செய்ய வேண்டி இருந்துள்ளது. அப்போது அந்த குழந்தைக்கு இருந்த கூடுதல் ஆண்குறியையும் நீக்கியுள்ளனர்
உலகிலேயே 60 லட்சம் பேரில் ஒருவருக்கு மட்டுமே இது போல ஏற்படும். இந்த குறிப்பிட்ட வழக்கில் அந்த குழந்தைக்கு இரண்டு ஆண்குறிகளும் சாதாரணமாகவே இருந்துள்ளது.
மேலும், இரண்டுக்கும் தனித்தனி சிறுநீர்ப்பாதை திறப்புகள் இருந்தன. மேலும், அக்குழந்தைக்கு இரண்டு ஆண்குறிகள் வழியாகவும் சிறுநீர் வந்துள்ளது.. மருத்துவர்கள் ஸ்கேன் செய்த பார்த்ததில் இரண்டு சிறுநீர் குழாய்களுமே சிறுநீர்ப்பையுடன் இணைந்து இருப்பதும் தெரிய வந்தது.
மேலும், அக்குழந்தைக்கு டைப் 4 பிறவிக் குடல் பவுச் இருப்பதையும் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இதையடுத்து குழந்தை பாதுகாப்பாக மலம் கழிக்க சிக்மாய்ட் கோலோஸ்டமி உருவாக்கப்பட்டது.

இதுபோன்ற சூழல் பச்சிளம் குழந்தைக்கு ஏற்படும்போது உடனடியாக ஆபரேஷன் செய்வதே ஒரே தீர்வாகும். இந்த நிலை பெற்றோர்களுக்கு அதிர்ச்சியாகத் தோன்றினாலும், குழந்தை சிறுநீர் கழிக்க முடிந்தால் போதும்.
அப்போது அது அவசரநிலையாகக் கருதத் தேவையில்லை எனச் சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதற்குச் சிகிச்சை அளிக்கும்போது சிறிய அல்லது செயல்படாத ஆண்குறியை அகற்றிவிடுவார்கள். அதேபோல குழந்தை எடை கூடியதும் சிறுநீர்ப் பாதையைச் சரி செய்வார்கள்.
இது அரிதாகவே குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. எதற்காக இதுபோல ஏற்படுகிறது என்பதைக் கண்டறியத் தீவிர ஆய்வுகள் நடந்து வருகிறது. இருப்பினும், இதற்கான காரணம் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஆனால் கர்ப்பத்தின் 3 முதல் 6 வாரங்களுக்கு இடையில் ஏற்படும் வளர்ச்சிப் பிழைகள் காரணமாக இந்த குறைபாடு ஏற்படுவதாக நம்பப்படுகிறது.